ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 13 ஆக உயர்வு!
ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் ஹிகாவா நகரில் குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனம் NHK செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Tags:
உலகம்
