காவிரி நதிநீர் விவகாரம்: 13 பேர் கொண்ட குழுவுடன் கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்!


காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூரு செல்லவுள்ளார்.

இதற்கு முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் காவிரி நதிநீர் பகிர்வு, மேகதாது அணை திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் முதல்வர் விஜயுடன் 13 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும் பங்கேற்கிறது. அந்தக் குழுவில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், முதல்வரின் செயலாளர்கள் செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி, முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி, நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, தலைமைப் பொறியாளர் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

கர்நாடகா முதல்வருடன் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் காவிரி நதிநீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை தொடர்பான விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.