வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த கார்! உள்ளே இருந்த இளைஞர்களின் நிலை என்ன?
யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
இலங்கை செய்தி

