இறந்த மகனின் உடல் மீது மயங்கி விழுந்து தாயும் உயிரிழப்பு ; சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
மதுரையில் இறந்த மகனின் உடல் மீது தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் குமரவேல்(51). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவருடைய மனைவி ராஜதிலகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குமரவேல் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்ததில் குமரவேல் இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. இதன்போது அவரது தாய் தாயார் கோவிந்தம்மாள் (80). மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
திடீரென தனது மகனின் உடல் மீது மயங்கி விழுந்து உயிரைவிட்டார். இந்நிலையில் மகன் உயிழந்த துயரத்தில் தாய் மரணமான சம்பவம் மதுரையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
இந்திய செய்தி