மீண்டும் உயர்ந்த தங்க விலை – நகை வாங்குவோருக்கு முக்கிய தகவல்!


இன்று (30) காலை பதிவான விலையுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனையான நிலையில், தற்போது 3,000 ரூபாய் அதிகரித்து 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 351,500 ரூபாயாக விற்பனையாகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,938 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்க விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் தொடர்ச்சியாக பிரதிபலித்து வருவதால், தங்க விலையில் நாள்தோறும் மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.