தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தென்னம்பிள்ளைகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!


இலங்கையில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தென்னம்பிள்ளைகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வறட்சி, வெள்ளம், அதிக மழை, சூறாவளி, மண்சரிவு மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தென்னம்பிள்ளைக்கு ரூ.40 காப்புறுதி கட்டணமாக செலுத்துவதன் மூலம் வருடாந்தம் ரூ.550 வரை இழப்பீடு பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதேபோல், அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை காப்புறுதி செய்யும் போது ரூ.875 கட்டணத்தின் கீழ் ஒரு தென்னம்பிள்ளைக்கு வருடாந்தம் ரூ.12,450 வரை இழப்பீடு பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.