வியட்நாம் ஜனாதிபதியின் விஜயத்தில் கையொப்பமிடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில், வியட்னாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி 2026 மே 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பல துறைகளை உள்ளடக்கிய பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:
• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் இனத்துவ மற்றும் சமய விவகார அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் சமய அபிவிருத்தி, சமய மாணவர் நலன், சமய நம்பிக்கைகள், சடங்கு மற்றும் பாரம்பரியங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் பொது பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆய்வு நிறுவனத்திற்கிடையில் பயிற்சி மற்றும் ஆய்வு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
.webp)