இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் : இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை!


அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பகுதியில் இன்று இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கடுமையான சண்டையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. மோதல் தீவிரமடைந்த நிலையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் சம்பவத்திற்குப் பின்னர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய சூரியவெவ பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.