வீதி விதிமீறல்களை புகாரளிக்க புதிய ‘WhatsApp’ இலக்கம் அறிமுகம்!


அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு வசதியாக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 070-4755600 என்ற இலக்கத்தின் மூலம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அனுப்ப முடியும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில், இந்த சேவை 24 மணிநேரமும் செயற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வீடியோக்களை அனுப்பும் போது சம்பவம் இடம்பெற்ற திகதி, இடம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் பிரிவு ஆகிய விவரங்களையும் தெளிவாக குறிப்பிடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.