இன்று முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ்..!


இன்று (29) முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று (29) ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, கிரிக்கெட் விளையாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அதன் நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளவும் விரைவில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.