இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!


இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர், இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் லெவன் ஜகார்யனை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு நட்புறவான சூழலில் நடைபெற்றதுடன், இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர நலன்களை சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளை ரஷ்ய தூதுவர் லெவன் ஜகார்யன் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாகிஸ்தானின் பங்களிப்பு முக்கியமானது” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு தெற்காசிய பிராந்தியத்தின் தூதரக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.