சிகிச்சையை முடித்துவிட்டு சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் ரணில்!
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) காலை நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி, மேலதிக சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார்.
முன்னதாக, இலங்கையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் அங்கு தங்கி ஓய்வு பெற்ற அவர், தற்போது முழுமையாக குணமடைந்து நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இன்று காலை அவர் நாடு திரும்பியபோது, விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்களும் அவரை வரவேற்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
