எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான சேவைகள் பாதிப்பு!
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களின் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சில உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை இரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மே மாதத்தில் சுமார் 12% விமான சேவைகள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
“மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் பிற செலவுகள் அதிகரித்ததன் விளைவாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதனால் எங்கள் விமான அட்டவணையில் சில தற்காலிக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். எங்களது வாடிக்கையாளர்களின் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:
உலகம்
.jpg)