ஈரானிய தூதுவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால!
ஈரான் தூதுவர் அலிரெசா டெல்கோஷ், நேற்று (25) புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஈரான் தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
சந்திப்பின் போது, ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் வீரமரணம் அடைந்த தலைவருக்கு மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மக்களுக்கான தனது ஆதரவையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் ஈரான் – இலங்கை இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
