சீமெந்து விலை அதிகரிப்பு!
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் கட்டுமானத் துறையில் முக்கியமான சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது.
கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்ததன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் 175 ரூபாவால் உயர்ந்துள்ளது.
அதன்படி, சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து தற்போது ரூ. 2,250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இந்த நெருக்கடியின் காரணமாக மணல், கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
இலங்கை செய்தி
.jpeg.jpg)