மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள்; இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!


இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் மோதல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், பிராந்திய பதற்றங்களின் பின்விளைவுகள் மற்றும் அவை ஏற்படுத்தும் விரிவான தாக்கங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” (Neighbourhood First) கொள்கையும் “மகாசாகர்” (SAGAR) தொலைநோக்கு முயற்சியும் தொடர்ந்தும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.