ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி : டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!


ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், அமெரிக்க இராணுவம் ஈரானின் விமானப்படையை முற்றாகச் சிதைத்துள்ளதாகவும், அந்நாட்டின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தடுக்கவே இந்தத் தீர்மானமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானில் தாக்குவதற்காக இனி குறிப்பிடத்தக்க இலக்குகள் எதுவும் இல்லையெனவும், தேவையான நேரத்தில் தாக்குதலை நிறுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.