பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (13) நிறைவடைகிறது.
இதனையடுத்து, நாளை (14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர (O/L) பரீட்சை, பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு,
- 382,249 பாடசாலை பரீட்சார்த்திகள்
- 69,214 தனியார் பரீட்சார்த்திகள்
என மொத்தம் 451,463 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
