இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!


உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 

செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்றைய தினம் 338,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 11,000 ரூபாய் அதிகரித்து 349,600 ரூபாவாக காணப்படுகிறது. 

அதேநேரம் நேற்றைய தினம் 368,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 380,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக காணப்படுகிறது.