சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, கடந்த 11 நாட்களில் மொத்தம் 94,041 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 


அதில் 11,367 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மேலும் ரஷ்யாவிலிருந்து 8,425 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,067 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 5,306 சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வந்துள்ளனர். 



2018 இலிருந்து அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த 2025ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. 



2024 உடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் சுற்றுலாத் துறையினரால் கிடைக்கப்பெற்ற வருமானம் 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 


அதன்படி, 2025ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலாத் துறை 3,219.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.