போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!


போதைப்பொருள் விற்பனை வலயமைப்பொன்றினை நடாத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை ஹபரனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஹபரனை பொலிஸ் பிரிவின் கல்ஒய மற்றும் ரொட்டவெவ பகுதியில் நேற்று (12) மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

 


இந்த கைது நடவடிக்கையின் போது 123 கிராம் 600 மில்லி கிராம் அளவுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மிக நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

 

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மதுசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் ஹிங்குரன்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.