கடவத்தை முதல் மீரிகம இடையிலான 40 சதவீத பணிகள் நிறைவு!
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமான கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளில் சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகளைக் கண்காணிக்கும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டுமானப் பணிகளின் போது கொழும்பு- கண்டி பிரதான வீதியிலும், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் இடங்களிலும் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள் குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறும் அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கைகள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
