நாட்டில் ஏற்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து: வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் காயம்
அனுராதபுரம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற ஜீப்–வான் மோதல் விபத்தில், வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஜீப், எதிர்திசையில் இருந்து வந்த வானுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் வெளிநாட்டு தம்பதியினரும், ஜீப்பின் ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, வானில் பயணித்த மற்றவர்கள் முதலில் மரதன்கடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
