உயரமாக வந்த பந்தை கேச் பிடிக்க முயன்ற, இரு கிரிக்கட் வீரர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு!
மினுவங்கொடை, அலுதெபொல பகுதியில் உள்ள வலகம்பை மைதானத்தில் நேற்று (நவம்பர் 9) நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக 41 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயரமாக சென்ற பந்தைப் பிடிக்க முயன்ற இரு வீரர்கள் மோதிக்கொண்டதே விபத்துக்கு காரணமாகும்.
இதில் ஒருவர் படுகாயமடைந்து மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்தவர் கட்டுவல்லேகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
