முப்படையினர், பொலிஸாருக்கான விடுமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து!
முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக, ஒரு அதிகாரி தான் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சேவைக்குச் சமூகமளிக்க முடியாவிட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சேவைக்குச் சமூகமளிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அவசர அனர்த்த நிலைமைகளுக்காக 117, 119 என்ற அவசர அழைப்பு இலக்கங்கள்,
1990 என்ற சுவசரிய சேவை (Suwasariya Service), 110 என்ற தீயணைப்புப் பிரிவு, 113 என்ற இராணுவத் தலைமையகம், 116 என்ற விமானப்படைத் தலைமையகம் ஆகிய விளக்கங்களுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
