லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படவுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் 3,690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
5 கிலோகிராம் நிறைக் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 1,482 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
2.3 கிலோகிராம் நிறைக் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 694 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
