8 வயது சிறுமி துஸ்பிரயோகம்; குற்றவாளிக்கு கடூழிய சிறைதண்டனை!


மன்னார் - அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டவருக்கு 8 வருட கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி  எம். மிஹால்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக இரண்டு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்குக் கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.