பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!
பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமத்திய, மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையின் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான எச்சரிக்கை இன்று இரவு 11:00 மணி வரை அமுலில் இருக்கும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி