பொதுமக்களுக்கு மிரட்டல் விடுவது, துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட இருவர் கைது!


துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டல் குற்றங்களில் ஈடுபட்ட இருவர் போதைப் பொருட்களுடன், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி கணேமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

அதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, திங்கட்கிழமை (20) மதியம்,  இந்த குற்றத்தில் ஈடுபட்ட  சந்தேக நபர் ஒருவர், 26 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடனும், மற்றொரு சந்தேக நபர் 19 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாகவிற்ற பகுதியைச் சேர்ந்த  28 மற்றும் 33 வயதுடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.