நேரடி வௌிநாட்டு முதலீடு அதிகரிப்பு!


இலங்கை முதலீட்டு சபையினால் (BOI) அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை (BOI) அறிவித்துள்ளது.

இதில் முதலீடுகளுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு வணிகக் கடன்களும் அடங்குகின்றன.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 138% அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு வரவு பின்வரும் நான்கு ஆதாரங்களில் இருந்து வருகிறது.

பங்கு மூலதனம் - US$ 133 மில்லியன்

மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் - US$ 132 மில்லியன்

முதலீட்டிற்கான நிறுவனங்களுக்கு இடையேயான வெளிநாட்டு கடன்கள் - US$ 231 மில்லியன்

முதலீட்டிற்கான நீண்டகால வெளிநாட்டு வணிகக் கடன் - US$ 331 மில்லியன்

இந்த முன்னேற்றம் புதிய முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும், வலுவான வணிகச் சூழலில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.