கடன் அட்டைகளை வைத்திருப்பவர்களின் செலவினங்கள் அதிகரிப்பு!


இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன.

இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ.2.89 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது ஜூலையில் பதிவான ரூ.373 மில்லியனிலிருந்து கூர்மையான அதிகரிப்பாகும்.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில், கடன் அட்டைகள் மூலமான கடனில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புடன், மாத இறுதிக்குள் மொத்த நிலுவையில் உள்ள கடன் அட்டை கடன் மொத்தமாக ரூ.164.17 பில்லியனாக அதிகரித்துள்ளது.

கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு சுமார் 26 சதவீதமாக இருந்தாலும், அவற்றின் கடனில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வு, நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவதை காட்டுகிறது.

அத்துடன், படிப்படியாக பொழுதுபோக்கு, உணவு மற்றும் ஓய்வு நடவடிக்கைகள் போன்ற விருப்பமான வகைகளுக்குத் திரும்புவதையும் பிரதிபலிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.