பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்!


பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த இரு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு பேருந்துகளினதும் பெறுமதி 80 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.