2000 ரூபாவாக உயர்ந்த தேசிக்காய்!


உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் (தேசிக்காய்) சில்லறை விலை 1800 முதல் 2000 ரூபாவாக  உயர்ந்துள்ளதாக நுகர்வோர்  தெரிவித்துள்ளனர். 

தற்போது தேசிக்காய் அறுவ​டை மிகக் குறைந்த அளவிலேயே அறுவடை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனாலேயே சந்தையில் தேவையைப் பூர்த்தி செய்ய விநியோகம் இல்லாததால் குறித்த விலையில் விநியோகிக்கப்படுவதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆகக் கூடிய அளவில் தேசிக்காய் விற்பனை செய்யப்படுவதற்கு காரணம் அறுவடை இல்லாமையே என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.