14 வயது மாணவியை கடத்திய 17 வயதான இளைஞர் கைது!


நமுனுகுல கனவெரெல்ல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை (வயது 14) கடத்திய குற்றச்சாட்டில்  17 வயதான இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (16) கைது செய்யப்பட்டதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.  

பண்டாரவளையில் உள்ள பட்டியகெதரவைச் சேர்ந்த சந்தேக நபர், நமுனுகுல கனவெரெல்ல தோட்டத்தில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபர் முன்பு சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாகவும்,  பொலிஸார் தெரிவித்தனர். 

தனது தந்தை தன்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி அவருக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, சந்தேக நபர் வேலைக்காக கொழும்பில் தங்கியிருந்த தனது தாயிடம் சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் தந்தை இந்த விவகாரம் குறித்து பொலிஸில் புகார் அளித்தார்.

சிறுமி, சந்தேக நபர் மற்றும் சந்தேக நபரின் தாய் பின்னர் தாமாக முன்வந்து பொலிஸில்  முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.