குடும்பத் தகராறு - ஒரு வயது குழந்தையுடன் கடலில் குதித்த தாய்!
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயது குழந்தையுடன் கடலில் குதித்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் குதித்த தாய் உயிருடன் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வயது குழந்தை கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாய் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனுடன் முரண்பட்டு நுவரெலியா வெலிமடை பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாயின் கணவன் நுவரெலியாவில் பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
