காஸா பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தயார்!


காஸா பகுதியில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்ததன் பின்னணியில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், காஸா பகுதியைக் கைப்பற்றுவதற்கான தனது நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.