சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டண உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் இருந்து ரெயில்களில் சரக்குகளை ஏற்றும் மற்றும் இறக்கும் பணிக்காக ரெயில்களை நிறுத்துவதற்கும், பாதையை மாற்றுவதற்கும் வசதியளிக்கும் கட்டணத்தை, ரெயில்வே துறை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு மணி நேர அடிப்படையில் வசூலித்து வருகிறது.
இந்த கட்டணத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 11% முதல் 12% வரை அதிகரிப்பு செய்யப்பட இருப்பதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை, ஜூலை 14ஆம் தேதி ரெயில்வே வாரியத்தால் அனைத்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முந்தைய முறையாக, இந்த கட்டணம் கடைசியாக 2019ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கட்டண உயர்வு, ரெயில்வே வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இந்திய செய்தி
