பெற்ற பிள்ளைக்கு உணவில் நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு!
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தையொருவர், தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறதாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 வயதான சிறுமிக்கு உணவு உட்கொண்டதன் பின்னர் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.
குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உணவில் கிருமிநாசினி கலந்து ஊட்டியதாலேயே சிறுமிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்து்ளளது.
உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
ஆன்மீகம்
இந்திய செய்தி
இலங்கை
இலங்கை செய்தி
உலகம்
கல்வி
சமையல் குறிப்புகள்
சினிமா
தொழிநுட்பம்
மருத்துவம்
விளையாட்டு
