நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பஸ் விபத்து : 11 பேர் பலி, பலர் காயம்!


இன்றைய தினம் நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 37க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மலைப்பாங்கான நிலப்பரப்பில் கூர்மையான வளைவில் பயணிக்கும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.