எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு..!


எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு பின்னால் உள்ள வீடொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.