காசாவில் பேரழிவை உண்டாக்கிவரும் அதிசக்தி வாய்ந்த குண்டுகள் : வானில் பறக்கும் மனித உடல்கள்!


காசாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்களின் காரணமாக, மக்கள் அங்கங்கே உயிரிழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடல்கள் பல அடிகள் உயரத்தில் பறந்து விழும் காட்சிகள் தற்போது உலக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உலகம் இதுவரை கண்டு கொள்ளாத வகையில் செயல்படும் அதிசக்தி வாய்ந்த குண்டுகள், இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதால், பலர் உடலுடன் உடலாக சிதறி கீழே விழும் படங்களை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தக் காட்சிகள், பார்ப்போரை அதிர்ச்சியிலும், துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை உலக நாடுகள்  கண்டித்தாலும் கூட, தாக்குதல்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவது  மனிதநேயக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.