நிறுத்தப்படவுள்ள Skype இணையச் சேவை


2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டில் Microsoft இந்த சேவையை வாங்கியது, மற்றும் தற்போது 2025 மே மாதம் முதல் Skype சேவையை நிறுத்தும் என்று தளம் அதன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

முதலில் இலவசமாக கணினிகளுக்கு இடையே குரல் அழைப்புகளை வழங்கிய Skype, அந்தக் காலத்தில் புரட்சிகரமாக கருதப்பட்டது. ஆண்டுகள் கடந்தபோது, இணையத்தின் வேகம் முன்னேற்றம் அடைந்தது. பிறகு, Skype தளத்தில் காணொளி அழைப்புகளும் சேர்க்கப்பட்டன. 2005ஆம் ஆண்டுக்குள் 50 மில்லியன் பேர் Skype தளத்திற்கு பதிவு செய்தனர்.

ஆனால், அண்மை ஆண்டுகளில் Meta நிறுவனத்தின் WhatsApp, Zoom போன்ற சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டதால், Skype மீதான பாவனை குறைந்துள்ளது. இதன் காரணமாக, Microsoft Skype இணையச் சேவையை நிறுத்தும் முடிவை எடுத்து உள்ளது.