அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
இன்றைய (மார்ச் 7) தினத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிய மாற்றங்களுடன் நிலைக்கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.291.30 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.299.83 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல், ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.373.87 ஆகவும், விற்பனைப் பெறுமதி ரூ.387.88 ஆகவும் உள்ளது. யூரோவின் கொள்முதல் பெறுமதி ரூ.312.74 ஆக காணப்படுவதுடன், விற்பனை பெறுமதி ரூ.325.59 ஆக பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.202.28 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.210.86 ஆகவும் இருக்கிறது. அவுஸ்திரேலிய டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.182.08 ஆக காணப்படுவதுடன், விற்பனை பெறுமதி ரூ.191.37 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை அடுத்த சில நாட்களில் எந்த வகையில் மாறும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
