இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்


கடந்த சில நாட்களாக நாட்டில் தங்கத்தின் விலை நிலவரம் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது, இன்றைய தினம் (மார்ச் 7) தங்க விலை குறைவடைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.860,734 ஆக உள்ளது. 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.30,370 ஆக இருந்தாலும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.242,900 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேவேளை, 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.27,840 ஆக குறைந்துள்ள நிலையில், 22 கரட் தங்கப் பவுண் ரூ.222,750 ஆக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கத்தின் விலையும் மாற்றமடைந்துள்ள நிலையில், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.26,580 ஆக காணப்படுகின்றது, மேலும் 21 கரட் தங்கப் பவுண் விலை ரூ.212,600 ஆக உள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.232,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ரூ.214,600 ஆக பதிவாகியுள்ளது. எனினும், தங்க ஆபரணங்களின் விலை, மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாறுபடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.