அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 

அஸ்வெசும பயனாளிகளான முதியவர்களுக்கான கொடுப்பனவு குறித்து இன்று (15.03.2025) தேசிய முதியோர் செயலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, அஸ்வெசும திட்டத்தின் மூலம் ஏழ்மையான குடும்பங்களில் உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இந்த மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கி கணக்குகள் இல்லாதவர்கள் தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் வழியாக இந்த பணத்தை பெற முடியும் என்று தேசிய முதியோர் செயலகம் அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், இலங்கை வங்கிகளுடன் இணைந்து, நலன்புரி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகைகள் பரிசு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகள் வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இதன் பின்னர், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 மதிப்புள்ள வவுச்சரின் செல்லுபடியாகும் காலம், நேற்றைய தினம் (14.03.2025) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.