முதியவர்களுக்கான 3000 ரூபா கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!


இன்றைய தினம் (15.03.2025), தேசிய முதியோர் செயலகம் (National Secretariat for Elders) அஸ்வெசும திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கான நிதி உதவி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஏழ்மையான குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த நிதி உதவி, முதியவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். வங்கி கணக்குகள் இல்லாதவர்கள் அல்லது வங்கி கணக்குகளில் பணத்தைப் பெற முடியாதவர்கள், தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் பணத்தைப் பெறலாம் என்றும் தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.  


குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், நலன்புரி நன்மைகள் சபை, இலங்கை வங்கிகளுக்கு இடையேயான கொடுப்பனவு முறை தொடர்பான அமைப்பின் (SLIPS) மூலம், நலன்புரி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.