வெசாக் பண்டிகை இம்முறை நுவரெலியாவில்…!


புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு
அறிவிப்பின்படி, இந்த ஆண்டின் தேசிய வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கொண்டாடப்படவுள்ளது.

இந்த ஆண்டின் அரசு வெசாக் கொண்டாட்டம், பௌத்த ஞானத்தை ஏற்படுத்தும் வகையில், அனைத்து இன மக்களையும் பங்கேற்கும் விதமாக நடத்தப்பட வேண்டும் என புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, அரச வெசாக் பண்டிகை தொடர்பான கலந்துரையாடலின் போது, இந்த ஆண்டுக்கான அரசு வெசாக் தினக் கொண்டாட்டம் மே 12 ஆம் திகதி, வெசாக் பௌர்ணமி தினத்தன்று, நுவரெலியாவில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.