நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் இந்த வலுவான மாற்றம் பதிவாகி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான தேசிய உற்பத்தி மதிப்பீடுகளை சமர்ப்பிக்கும் போதே, அந்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.
4வது காலாண்டில் ( 2024 ஒக்டாபர், நவம்பர், டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.4% என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி