2028 இல் அறிமுகமாகும் புதிய பரீட்சை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள முக்கிய தீர்மானங்களை பற்றி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (10) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அவர் குறிப்பிட்டதாவது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், 2028 ஆம் ஆண்டு முதல் புதிய பரீட்சை முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், மாணவர்கள் மீது இந்த பரீட்சை ஏற்படுத்தும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை தற்போது போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது என்பதையும், இது பாடசாலைகளுக்கு இடையிலான தர வேறுபாடுகளால் உருவானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலைகளுக்கு இடையிலான தர ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Tags:
கல்வி
