இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு! பேக்கரி பொருட்களுக்கும் விலை ஏற்றம்
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் தலா 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை
.png)